×

மேலூர் அருகே சிவன் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சங்கரலிங்கம், ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி, கோமதியம்மாள் கோயில். இங்கு நேற்று சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு  நடைபெற்றது. முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகாவ்யம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் உட்பட பல அபிஷேகங்கள் நடைபெற்றது. பக்தர்கள் சிவபுராணம், கோளறு பதிகம், நந்திதேவரின் கவசம் பாராயணம் செய்தனர்.

 தொடர்ந்து மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டியும், உலக அமைதி வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரமேஷ் குருக்கள் மற்றும் சங்கர நாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Prado ,Shiva Temple ,Melur ,
× RELATED (வேலூர்) கொட்டகையில் இருந்த ஆட்டை...