×

கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

ஈரோடு, மே 3: சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு பெற்ற 654 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. கல்லூரியின் தாளாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைைம வகித்தார். இயந்திரவியல் துறை தலைவர் கோகுலகிருஷ்ணன் வரவேற்றார்.

கல்லூரி இயக்குனர் அர்ஜூன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக எக்ஸெல் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் சண்முகநாதன் கலந்துகொண்டு பணி நியமன ஆணையை மாணவர்களுக்கு வழங்கினார். இதில், 36 நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட 654 பேருக்கு வேலை நியமனம் ஆணை வழங்கப்பட்டது. விழாவில், மின்னியல் துறை தலைவர் தமிழரசி, வேலைவாய்ப்பு அலுவலர் செல்வகுமார், அனைத்து துறை தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Work Officer Ordering Officer ,Kongu Veller Polytechnic College ,
× RELATED சென்னிமலையில் த.ம.மு.க. ஆர்ப்பாட்டம்