×

1,000 ஆண்டு பழமையான கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கோபால்பட்டி, மே 3: நத்தம் அருகே 1,000 ஆண்டுகள் பழமையான கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நத்தம் அருகே கதிர்நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. இது 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தாகும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் விழா 29ம் தேதியன்று காலையில் யாகசாலை அமைக்கப்பட்டு பகவத் அனுக்வீரு, மகா சங்கல்பம் முதல்கால பூஜையுடன் தொடங்கியது. 31ம் தேதி இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. 1ம் தேதி மூன்றாம்கால பூஜை நடந்தது. நேற்று நான்காம் கால பூஜை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக காசி, ராமேஸ்வரம், கங்கை, அழகர்கோவில், காவிரி போன்ற புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி வந்தது. பின்னர் கோயிலின் உச்சியில் உள்ள கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டடு வேத மந்திரங்கள் முழங்க ஊற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : pilgrims ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்