×

இன்னும் மெருகேற போகிறது கொடைக்கானல்

கொடைக்கானல், மே 3: கொடைக்கானலில் ஏரிப்பகுதியில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடைக்கானல் ஏரி பகுதியில் தனியார் பங்களிப்புடன் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. கொடைக்கானல் ஏரி பகுதியில் உள்ள கழிப்பறைகள், நடைபாதைகள், தடுப்பு வேலிகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஏரியை சுற்றி நடந்து செல்லக்கூடிய நடைபாதை பகுதியை பாதுகாக்கும் நடவடிக்கையாக இருபுறமும் தடுப்பு அமைப்புகள் அமைக்கும் பணியை கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், இருபுறமும் நடைபாதை பகுதியில் தடுப்புகள் அமைப்பதன் மூலம் பாதசாரிகள் ஏரியைச் சுற்றி பாதுகாப்பாக நடக்க முடியும். இதற்கு வரவேற்பு இருக்கும் பட்சத்தில் ஏரி முழுவதும் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். செயல்படாத அனைத்து கழிப்பறைகளும் செயல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் அருகில் நவீன முறையில் அமைக்கப்பட்ட கழிப்பறைகளும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்