×

கந்துவட்டியால் பாதிப்பு நடவடிக்கைகோரி ஆர்டிஓவிடம் மனு

மயிலாடுதுறை, மே 3:நாகை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் வசித்து வரும்செந்தில் என்பவர் 2012ம் ஆண்டு மயிலாடுதுறை கிளை சிறைத்துறையிலிருந்து ஓய்வுபெற்ற முருகேசன் என்பவரிடம் ரூ.12லட்சம் 5பைசா வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார்.  
சிறுகச்சிறுக ரூ.38 லட்சம்வரை கட்டி முடித்துள்ளார்.  கடன் தொகை முடிந்ததும் அதற்கு ஈடாக வைத்திருந்த பூர்த்தி செய்யப்படாத செக்குகள், புரோ நோட்டுக்கள், வீட்டு பத்திரங்கள் போன்றவற்றை திருப்பி கேட்டதற்கு நான் வேறு நபரிடம் வாங்கி வட்டிக்குக் கொடுத்து வருகிறேன் விரைவில் வாங்கித் தருகிறேன் என்று கூறிவிட்டு 5 மாதம் கழித்து மீண்டும் ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால்தான் டாக்குமென்டுகளைத்தருவேன் என்று மிரட்டியுள்ளார்.மேலும் மேலும் மிரட்டவே செந்தில் இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர், எஸ்பி,  முதல்வரின் தனிப்பிரிவு போன்றவற்றிற்கு நடவடிக்கைக்கோரி மனுக்களை அனுப்பிவிட்டு, கடந்த ஜனவரி 23ம்தேதி மாலை மயிலாடுதுறை ஆர்டிஓ தேன்மொழியிடமும் மனு ஒன்றை அளித்திருந்தார். அதன்பேரில் ஜனவரி 29ம்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட 10க்கும்மேற்பட்ட நபர்கள் ஆர்டிஓ விசாரணைக்கு ஆஜரானார்கள். விசாரணைக்குப் பின்பு போலீசார் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படு வதாக ஆர்டிஒ தெரிவித்தார்.    

தேர்தல் விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஆர்டிஒ தேன்மொழி மாற்றப்பட்டு தற்பொழுது புதிய ஆர்டிஓவாக கண்மணி பொறுப்பேற்றுள்ளார்.  தேர்தல் வாக்குப் பதிவுமுடிந்தும் போலீசார் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட செந்தில் உட்பட 2 நபர்களுடன் சமூகஆர்வலர் வழக்கறிஞர் சங்கமித்திரன் அனைவரும் மயிலாடுதுறை ஆர்டிஓ கண்மணியிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர், அதில் ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவையே மீண்டும் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினர். மேற்படி கந்து வட்டித்தொழில் செய்துவருபவரால் பாதிக்கப்பட்ட பலரும் ஆர்டிஓவை சந்தித்து விளக்கமளிக்க உள்ளதாக வழக்கறிஞர் கூறினார்.



Tags : RTO ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு