×

அருகம்பாளையத்தில் சாலையோர குப்பைகளால் சுகாதார சீர்கேடு அபாயம்

கரூர், மே 3: கரூர் அருகம்பாளையம் சாலையில் சாலையோர குப்பையால் சுகாதாரகேடு ஏற்படுகிறது.கரூர் அருகே உள்ளது அருகம்பாளையம். வெங்கமேட்டில் இருந்து அருகம்பாளையம் செல்லும் சாலையில் சாலையோரம் குப்பைதொட்டிகள் நிறைந்து குப்பைகள் தெருவில் கொட்டப்பட்டுகிடக்கின்றன. மக்கும் குப்பைகளை ஆடுமாடுகள் மேய்கின்றன. காற்றில்பறந்தும் குப்பைகள் மக்கியும் சுகாதாரகேடு ஏற்படுத்தி வருகின்றது.  இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அருகம்பாளையம் பகுதியானது காதப்பாறை ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

 பஞ்சாயத்து அலுவலகத்தில் பலமுறை நாங்கள் முறையிட்டும் குப்பைகள் குவிந்துகிடப்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. உடனுக்குடன் அகற்றாமல் இருப்பதால் இப்பகுதியில் கொசு, ஈத்தொல்லை போன்ற சுகாதாரகேடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாத காரணத்தினால் கவுன்சிலர் தலைவர்போன்றவர்கள் இல்லை தனிஅதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனர்.


Tags : neighborhood ,
× RELATED தொடர்ந்து 14 நாட்கள் புதிதாக கொரோனா...