காவேரிப்பாக்கம் அருகே அதிகாலை பயங்கரம்கன்டெய்னரில் கார் மோதி வியாபாரி உட்பட 2 பேர் பரிதாப பலி டிரைவர் படுகாயம்

காவேரிப்பாக்கம், மே 3: காவேரிப்பாக்கம் அருகே முன்னால் சென்ற கன்டெய்னரில் கார் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். டிரைவர் படுகாயம் அடைந்தார்.சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கோபிநாத்(23), வியாபாரி. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சங்கரப்பா என்பவருடன் நேற்று அதிகாலை காய்கறிகளை வாங்க ஆந்திராவிற்கு காரில் சென்றார். காரை சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா(25) என்பவர் ஓட்டி சென்றார்.வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் அருகே நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வந்தபோது நிலைதடுமாறிய கார் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் கோபிநாத், ராமன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும், கார் டிரைவர் ராஜா படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த ராஜாவை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர், 2 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்டெய்னர் மீது கார் மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13...