×

மீஞ்சூர் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி

பொன்னேரி, மே 3: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் பள்ளிச் செல்லாத மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.மீஞ்சூர் ஒன்றியத்தில் பள்ளி செல்லாத மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதில் 6 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோர் கண்டறியப்பட்டு அவர்களுடைய முழு விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு பணி மீஞ்சூர் ஒன்றியத்தில் 517 கிராமப்புற 36 நகர்புற குடியிருப்பு பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று நடத்தப்படுகிறது.வட்டார வளமைய மேற்பார்வையாளர் கீதா தலைமையில் வட்டார கல்வி அலுவலர் முத்துலட்சுமி மேற்பார்வையில்,   ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், கிராம கல்விக்குழு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கணக்கெடுப்பு மூலம் கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அனைவரும் ஒருங்கிணைந்த கல்வி மூலம் செயல்படும் நீண்ட கால பயிற்சி மையம், குறுகிய கால பயிற்சி மையம், உண்டு உறைவிட பயிற்சி மையம் உள்ளடக்கிய கல்விக்கான சிறப்பு மையங்களில் சேர்க்கப்படுவர்.இவ்வாறு சிறப்பு மைதானங்களில்  சேர்க்கப்படும் குழந்தைகள் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களுடன் கூடிய கல்வியை பெறுவர். பொதுமக்கள் இதுபோன்ற பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் இருப்பது தெரிந்தால் அருகிலுள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரியப்படுத்தலாம் என வட்டார வளமைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : school children ,
× RELATED கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்