குடிபோதையில் தகராறு செய்து மனைவி, மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது

ஆவடி, மே 3: அம்பத்தூர் பாடி, கலைவாணர் நகர், மகாலட்சுமி தெருவை சேர்ந்தவர் குமார் (35). மெக்கானிக். இவரது மனைவி காமாட்சி (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. குமார் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி காமாட்சியை அடித்து துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் குமார் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் காமாட்சியிடம் தகராறு செய்து உருட்டுக்கட்டையால் அடித்துள்ளார்.

    இவரது அலறல் சத்தம்கேட்டு அண்ணன் கணேஷ் ஓடி வந்து  தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவரையும் குமார் கட்டையால் அடித்துள்ளார். இதில் காமாட்சி, கணேஷ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் உறவினர்கள் காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கொரட்டூர் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குமாரை கைது செய்தார். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : murder ,brother-in-law ,
× RELATED சாலையில் கிடந்த பணப்பையை...