×

தற்கொலை செய்த மேலாளர் உறவினரிடம் இருந்து 600 கிராம் நகையை மீட்டு தர வேண்டும்

சென்னை, மே 3: தற்கொலை செய்துகொண்ட மேலாளர் உறவினர்களிடம் இருந்து கடையில் கையாடல் செய்த 600 கிராம் நகைகளை மீட்டு தரக் கோரி பிரபல நகைக்கடை சார்பில் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை ஜாபர்கான்பேட்டை வடிவேல் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (32). இவர், பாண்டிபஜாரில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 15 ஆண்டுகளாக மேலாளராக வேலை ெசய்து வந்தார். கடந்த மாதம் 15ம் தேதி இவர் பணி முடிந்து இரவு சோகத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி என்ன? என கேட்டுள்ளார். அதற்கு, ‘கடையில் சின்ன பிரச்னை’ என கூறியுள்ளார். பிறகு இரவு உணவு சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்ற ரவிக்குமார், வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி அறையின் கதவை திறந்து பார்த்தபோது கணவர் ரவிக்குமார் மின் விசிறியில் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ரவிக்குமார் உறவினர்கள் நகைக்கடையில் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ரவிக்குமார் தற்கொலையில் பல மர்மங்கள் இருப்பதாகவும், எனவே ரவிக்குமார் வேலை செய்த நகைக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் போலீசாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில் தற்கொலை செய்த ரவிக்குமார் பணிபுரிந்த நகைக்கடையின் மேலாளர் பிரபாகரன் நேற்று முன்தினம் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகார் குறித்து போலீசார் கூறியதாவது:நகைக்கடையில் பழைய நகைகளை வாங்கும் பிரிவில் ரவிக்குமார் மேலாளராக இருந்துள்ளார். அவர் பணிக்காலத்தில் 600 கிராம் மதிப்புள்ள நகைகள் குறைந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நகைக்கடை நிர்வாகம் சார்பில் ரவிக்குமாரிடம் விசாரித்தபோது நகைகளை கையாடல் செய்தது தெரிய வந்துள்ளது.

உடனே நிர்வாகம் சார்பில் கையாடல் செய்த 600 கிராம் நகைகளை திரும்ப ஒப்படைக்க கோரி ரவிக்குமாரிடம் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சக ஊழியர்கள் முன்னிலையில் ரவிக்குமாரை அவமானப்படுத்தியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரவிக்குமார் கடந்த 15ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து ெகாண்டார். கடையில் கையாடல் செய்ததாக கூறப்படும் 600 கிராம் நகைகளை ரவிக்குமார் உறவினர்களிடம் கொடுத்துள்ளார். அவர்களிடம் இருந்து நகைகளை திரும்ப பெற்று தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : suicide manager ,relatives ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...