×

அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் திருவிழா

பேரையூர், மே 1: சேடபட்டி ஒன்றியம் அத்திபட்டியில் பிரசித்தி பெற்ற புதுமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த ஏப்.21ம் தேதி காப்பு கட்டுதல், ஏப்.26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த 5 நாட்கள் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் முதல் தீச்சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, அங்கபிரதட்சணம், பூக்குழி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நேற்று காலை வரை செலுத்தினர்.
முன்னதாக அதிகாலை வரதராஜ சுவாமிகள் 21 அலகு குத்தி சப்ரம் இழுத்து முக்கிய வீதிகளில் பவனி வந்து புதுமாரியம்மன் மாடரத வீதிகளில் சப்ரத்தை கையில் தீச்சட்டியுடன் இழுத்து வந்தார்.
ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர். பேரையூர் டிஎஸ்பி மதியழகன், டி.கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் சின்னக்கட்டளையில் சொர்ண முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
பக்தர்கள் குவிந்தனர்

Tags : Adipatti Pudumariyamman Temple Festival ,
× RELATED 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது