பெண்ணை தாயாக்கி தலைமறைவு அசாம் வாலிபருக்கு வலை

திருமங்கலம், மே. 1: செக்காணூரணியை சேர்ந்த 22 வயது இளம்பெண் திருமங்கலம் கப்பலூர் சிட்கோவில் உள்ள மில்லில் பணிபுரிந்து வந்தார். இங்கு இவருடன் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர் ஜமால் அலி (28) என்ற வாலிபர் பணிபுரிந்துள்ளார். ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த போது இளம்பெண்ணுடன் சிக்கந்தர் ஜாலியாக பேசவே அது காதலாக மாறியுள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் இரவு பணி நேரத்தில் ஆசை வார்த்தை கூறி சிக்கந்தர் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதில் இளம்பெண் கர்ப்பமாகவே இதுகுறித்து காதலனிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிக்கந்தர்அசாமிலுள்ள தனது பெற்றோரிடம் கூறி வந்து திருமணம் செய்து கொள்வதாக கூறி சென்றவர் அதன்பின் திரும்பி வரவில்லை.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணிற்கு பிரசவவலி உண்டாகவே மதுரை ஜிஹெச்சில் பெற்றோர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான சிக்கந்தரை தேடிவருகின்றனர்.

Tags : Assam ,
× RELATED சிறுமியை பாலியல் பலாத்காரம் உறவினர் போக்சோவில் கைது