×

நிலக்கோட்டையில் பரபரப்பு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கவர்னரின் செயலர் ஆய்வு நான்குவழி சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க வேண்டும்

நத்தம், மே 1: நான்குவழிச்சாலைக்கு கையகப்படுத்தபடும் நிலங்களுக்கு விரைவில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள், அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
நத்தம் பகுதிகளில் நான்கு  வழிச்சாலைக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு நத்தம்-மதுரை சாலை பணி நடைபெற்று வருகிறது. நத்தம்-துவரங்குறிச்சிக்கு நிலம் கையகப்படுத்தும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டம் நடத்தப்பட்டது. இதுபற்றி அதிகாரிகள், விவசாயிகளிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.  
 இந்நிலையில் நத்தம் தாலுகா அலுவலகத்தில் நான்கு வழிச்சாலை நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், நில எடுப்பு தாசில்தார் சரவணன், நத்தம் தாசில்தார் ஜான் பாஸ்டின் டல்லஸ் ஆகியோரை போராட்டக்குழு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று சந்தித்தனர். சங்க தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் அபுபக்கர் சித்திக், பழனியப்பன்  உள்ளிட்ட விவசாயிகள் குழுவினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சந்தித்து பேசினர். அப்போது, நத்தம்-மதுரை சாலை நில எடுப்பின் போது பரளி, வேம்பரளி உள்ளிட்ட பகுதிகளில் சாலை புறம்போக்கில் குடியிருப்பு அமைத்து குடியிருந்தவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது. அதற்கான இழப்பீடு 32 பேருக்கு வழங்க வேண்டும். மேலும் நத்தம்-துவரங்குறிச்சி நான்குவழிச் சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு, மா, தென்னை போன்ற மர இனங்களுக்கான இழப்பீடு மதிப்பு பட்டியல் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரினர்.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பரளி, வேம்பரளி பகுதிகளில் அப்புறப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; நத்தம்-துவரங்குறிச்சி நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்திய இடங்களில் உள்ள மரம் மற்றும் குடியிருப்புகளுக்கான இன அடிப்படையிலான இழப்பீடு வழங்குவதற்கான மதிப்பீட்டு பட்டியல் விரைவில் வழங்கப்படும் என கூறினார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து
சென்றனர்.
இது குறித்து விவசாயி அபு பக்கர் சித்திக் கூறுகையில், நிலம் எடுக்கும் போது விவசாயிகளின் நிலம், மரத்தின் இனங்களுக்கான மதிப்பீடு செய்து அவற்றின்படி விவசாயிகள் அனைவருக்கும் துரிதமாக பணம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Governor ,Secretariat Inspectorate ,Nilakkottai ,
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...