×

செக் மோசடி வழக்கு அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 2 பேருக்கு 1 ஆண்டு சிறை

தாராபுரம், மே 1: தாராபுரம் அடுத்த பச்சாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(50). இவர் தேர்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கோவிந்தராஜ் மூலனூரை சேர்ந்த சம்பத் என்பவரிடம் கடந்த 20.11.2011ம் ஆண்டு தனது குடும்ப செலவுக்காக ரூ.10 லட்சம்
கடனாக பெற்றுள்ளார்.
அதற்கு ஈடாக செக் ஒன்றை அளித்துள்ளார். கடன்தொகையை திருப்பி செலுத்தும் தவணை கடந்த நிலையில் ஆசிரியர் கோவிந்தராஜ் பணத்தை தரவில்லை. இதைத்தொடர்ந்து, சம்பத் கோவிந்தராஜ் அளித்த செக்கை வங்கியில் செலுத்தினார். ஆனால் கோவிந்தராஜ் கணக்கில் பணம் இல்லை.  இதுகுறித்து சம்பத் தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் செக்மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிக்குமார் கோவிந்தராஜுக்கு ஒரு ஆண்ட சிறைதண்டனை விதித்து  தீர்ப்பளித்தார்.
இதேபோல் திருப்பூர் வள்ளியம்மாள்நகரை சேர்ந்த பழனிச்சாமி(52) என்பவர் அதேபகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் ரூ.6 லட்சத்து 10ஆயிரம் கடனாக பெற்றுகொண்டு அதற்கு செக் கொடுத்துள்ளார். ஆனால் பழனிச்சாமியின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லை. செந்தில்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பழனிச்சாமிக்கு  ஒரு ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : Czech ,government school teacher ,
× RELATED துபாய் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றது சினியகோவா ஜோடி