×

சிவன்மலையில் தண்ணீர் இன்றி விலங்குள் தவிப்பு

காங்கயம், மே 1: காங்கயம் அருகே, சிவன்மலை பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் சிவன்மலை வனப்பகுதியில் உள்ள குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் தாகத்தை தீர்ப்பதற்காக சிவன்மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்ரமணியசாமி கோயிலின் கிரிவலப் பாதையில் விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கடும் கோடை வெப்பம் வாட்டி வருகிற நிலையில், இந்த தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளதால், இப்பகுதியில் உள்ள குரங்குகள் மற்றும் கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றன. எனவே இந்த தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரப்பி, விலங்குகளின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனை கூட்டம்