×

வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகள் வரை எண்ணப்படும்

தேனி, மே 1: தேனி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை அதிக பட்சமாக 23 சுற்றுகள் வரை எண்ணப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
தேனி நாடாளுமன்றத் தொகுதி பொதுத் தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 23 ம்தேதி தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் நடக்க உள்ளது.
இதில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 14 டேபிள்கள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இதில் சோழவந்தான் தொகுதியில் 18 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. பெரியகுளம், கம்பம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் தலா 22 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, போடி ஆகிய முன்று தொகுதிகளிலும் தலா 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் தெரிவித்தார்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...