×

லட்சுமி நகர் சாலையை சீரமைக்க கோரிக்கை

திருப்பூர், மே 1: திருப்பூர் லட்சுமிநகர் ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால், இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகள், நெடுஞ் சாலைத்துறை, கிராமபுற நெடுஞ்சாலைகள், நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் சார்பில் ரோடுகள் போடப்படுகின்றன. பொதுவாக ரோடுகள் போடப்பட்டு அதிக பட்சம் 5 ஆண்டுகளுக்கு பின் தான் அடுத்த முறை புதிய ரோடு போடப்படும்.
ஆனால் திருப்பூர் மாநகரின் பல இடங்களில் போடப்பட்டுள்ள ரோடுகள் ஓராண்டிற்குள்ளாகவே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி டூவீலர்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போடப்பட்ட ரோடுகள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் வரை தாக்கு பிடித்தது. ஆனால் தற்போது போடப்பட்ட ரோடுகளோ, போடப்பட்ட குறிப்பிட்ட மூன்று மாதத்திலே சேதமடைந்தது. பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தானே என்பதால், தரமற்ற ரோடுகள் பெயரில் அரசின் பணமும் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறிய பள்ளம், மேடுகளை சரி செய்ய ‘பேட்ஜ் ஒர்க்’ அவ்வப்போது நடக்கிறது.
இவையும் தரமாக இருப்பதில்லை. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் இருந்து கொங்கு நகர் செல்லும் ரோட்டில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
இதனால் இப்பகுதியில் தினசரி விபத்து ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக இருந்து வருகின்றனர்.
இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி
உள்ளது.

Tags : Lakshmi Nagar Road ,
× RELATED கொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது