×

கடமலைக்குண்டுவில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தாமதமாக வரும் அலுவலர்கள் பொதுமக்கள் அவதி

வருசநாடு, மே 1: கடமலைக்குண்டு பத்திர பதிவு அலுவலகத்திற்கு தாமதமாக அதிகாரி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைக்குண்டு கிராமத்தில் பத்திரபதிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு கடந்த சில தினங்களாகவே அங்கு பணியாற்றி வரும் அதிகாரிகள் தாமதமாக வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தினமும் காலை 11 மணி அல்லது 12 மணிக்கு அதிகாரிகள் வேலைக்கு வருவதாகவும், இதனால் தங்களின் வேலைச்சுமை அதிகரித்து வருகிறது எனவும் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்தும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாபாரிகள் கடமலைக்குண்டு பத்திர பதிவு அலுவலகம் வருகின்றனர்.


அவ்வாறு வந்து பணிகளை செய்ய முடியாமல் மாலை 5 மணிக்கு அதிகாரிகள் வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். இதனால் முதல் நாள் கொடுக்கப்பட்ட பத்திரம் இரண்டாவது நாள் மூன்றாவது நாள் என இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. மேலும் கடமலை-மயிலை ஒன்றியத்தில் சில தினங்களில் கம்ப்யூட்டர் வேலை அல்லது நெட் வேலை செய்யவில்லை எனவும் அதிகாரிகள் புறக்கணித்து விடுகிறார்கள். இதனால் அரசு நிர்வாகத்திற்கு பல்லாயிரக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு மன உளைச்சல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே இது சம்பந்தமாக தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து கடமலைக்குண்டு பத்திர பதிவு அலுவலகத்தில் அதிகாரிகள் துரித பணி ஆற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Office of the Secretariat ,public ,Kilinochchi ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...