×

பராமரிப்பு இன்றி கிடக்கும் நகராட்சி பூங்காக்கள்

ஊட்டி, மே 1:  ஊட்டி நகரில் உள்ள அனைத்து நகராட்சி பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால், கால்நடைகளின் கூடாரமாக மாறியுள்ளது.
ஊட்டி நகராட்சியிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்கள் அனைத்தும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் ஆங்லேயர்களால் உருவாக்கப்பட்டவை. இந்த பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் தற்போது பராமரிக்ககாமல் இருந்தது. இதனால் பூங்காக்கள் அனைத்தும் முட்புதர்களால் சூழ்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுக்கு முன் ஊட்டி நகராட்சி தலைவராக இருந்த ராஜேந்திரனின் முயற்சியால், மீண்டும் நகரில் உள்ள அனைத்து பூங்காக்களும் பொலிவு பெற்றன.
இந்நிலையில், தற்போது இப்பூக்காக்களை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளதால், அனைத்து பூங்காக்களும் பாழடைந்து காணப்படுகிறது. ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள பாறை முனீஷ்வரர் கோயில் பூங்கா அருகேயுள்ள அம்பேத்கார் பூங்கா, டேவிஸ் பூங்கா உட்பட அனைத்து நகராட்சி பூங்காக்களும் முறையாக பராமரிக்கப்படாத நிலையில், இப்பூங்கா தற்போது எருமைகளின் கூடாரமாகவும், சமூக வீரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. எனவே, நகரில் உள்ள பூங்காக்களை பராமரிக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : parks ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 இடங்களில் கைத்தறி பூங்கா