×

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தின் கேமரா பதிவு மீட்பு

ேகாவை, மே 1: கோவை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் முடங்கிய கண்காணிப்பு கேமராவில் இருந்த காட்சி பதிவுகள் மீண்டும் மீட்கப்பட்டது.
 கோவை மக்களவை தேர்தலுக்கான ஓட்டு பதிவு கடந்த 18ம் தேதி முடிந்தது. இந்த தேர்தலுக்காக 2,605 ஓட்டு பதிவு மெஷின் பயன்படுத்தப்பட்டது. இந்த ஓட்டு பதிவு மெஷின், கட்டுபாட்டு கருவிகள், சின்னம் காட்டும் கருவிகள் மற்றும் ஆவணங்கள் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) வைக்கப்பட்டுள்ளது.
 கடந்த 22ம் தேதி 5 ஸ்ட்ராங்க் ரூம் மற்றும் வளாகங்களை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த கேமரா பழுதானது. பல மணி நேரம் காட்சி பதிவு தெரியாத நிலையில் வேட்பாளர்களின் ஏஜன்டுகள் தேர்தல் பிரிவில் புகார் அளித்தனர். கோவை வடக்கு தொகுதி தவிர இதர ெதாகுதிகளுக்கான ஸ்ட்ராங்க் ரூம் கேமரா இயங்காதது சர்ச்சையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது.
 இந்நிலையில் கேமராவின் இயக்கம் தொடர்பாக தொழில் நுட்ப குழுவினர் ஆய்வு நடத்தினர். இது தொடர்பாக கோவை தேர்தல் பிரிவினர் கூறுகையில், ‘‘ கேமராக்களில் பதிவான காட்சிகளை தொழில் நுட்ப குழு மீட்டது.  கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தில் தொடர்ந்து இருந்துள்ளது. ஆனால் அந்த காட்சிகள் திரைகளில் தெரியவில்லை.
இணைப்பு ஒயர்கள் பழுதாகியதால் சிக்கல் ஏற்பட்டது. இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு, 144 கேமராக்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.  காட்சி தெரியாத நேரத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த விவரங்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்ட்ராங்க் ரூம்களில் எந்த விதமான அத்துமீறல்களும் நடக்கவில்லை, ’’ என்றனர்.

Tags : Coimbatore Voting Center ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு