×

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் டூவீலர் பார்க்கிங் கட்டணம் செலுத்த ஸ்வைப் மிஷின் ஆணையர் துவக்கிவைப்பு

திருச்சி, மே 1:  திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் டூவீலர் கட்டணம் செலுத்த ஸ்வைப்  மிஷின்  பயன்பாட்டை மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டண பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஏலம் விடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இதற்கான ஏல காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ஏலம் விடப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இருசக்கர வாகன பார்க்கிங் மாநகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாநகராட்சி பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஏடிஎம் கார்டுகளை கொண்டு ஸ்வைப் செய்து பணம் செலுத்தும் வகையில் நேற்று முதல் ஸ்வைப் மிஷின் எஸ்பிஐ வங்கியால் வைக்கப்பட்டது.

இதன் துவக்க விழா நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி ஆணயைர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு 3 ஸ்வைப் மிஷின்களை துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாநராட்சி உதவி ஆணையர் திருஞானம், நிர்வாக அலுவலர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். இதனால் கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற பிரச்னைகளும் தவிர்க்கப்படும் என ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Tags : Tuweiler ,Swipe Machine Commissioner ,Trichy Central Bus Station ,
× RELATED ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்து வாலிபர் பலி