×
Saravana Stores

பேரிடர் காலங்களில் தப்பிக்க, செயல்பட டிஎன்-ஸ்மார்ட் செயலியை பயன்படுத்துங்க கலெக்டர் வலியுறுத்தல்

திருச்சி, மே 1: திருச்சி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறையால் 2018 முதல் டிஎன்-ஸ்மார்ட் என்ற செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் மழைமானி அமைக்கப்பட்டுள்ள 25 இடங்களின் மழையளவு, காலநிலை, வெள்ளம், சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம் மற்றும் தீவிபத்து ஏற்படும் காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் மற்றும் செயல்படக்கூடாது ஆகிய விபரங்கள் மற்றும் பேரிடர் தொடர்பான விழிப்புணர்வு அறிக்கைகள் ஆகிய விபரங்களை இச்செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். பேரிடர்களால் ஏற்படும் மனித உயிரிழப்பு, வீடுகள் சேதம், சாலைகளில் காற்றினால் மரம் வீழ்வு, போக்குவரத்து தடை, மின்கம்பி அறுந்து விழுதல், மின் கம்பம் விழுதல், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்படுதல், நீர்நிலைப்பிடிப்புகளில் அபாயகரமான அளவில் நீர்வரத்து ஆகிய விபரங்களை புகாராகவோ அல்லது தகவலாகவோ இச்செயலியின் மூலம் பதிவு செய்யலாம். இதன்மூலம் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். எனவே பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இச்செயலியை பதிவிறக்கம் செய்து பேரிடர் தொடர்பான விபரங்களை தெரிந்துகொள்ளலாம். இத்தகவலை திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : collector ,disaster ,
× RELATED நத்தம் அருகே தொடரும் அவலம்...