×

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வீனஸ் பள்ளி 100% தேர்ச்சி

சிதம்பரம், மே 1: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் தேர்வெழுதிய 231 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி மாணவிகள் தர்ஷினி, ஐஸ்வர்யா ஆகிய இரு மாணவிகள் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று சிதம்பரம் நகரில் சிறப்பிடம் பெற்றனர்.மாணவி கனிகா 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், மாணவிகள் அபராஜிதா, தன்யா காயத்ரி ஆகியோர் 500க்கு 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். இப்பள்ளியில் 475 மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 35 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 69 மாணவர்களும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த பள்ளியில் சாதனைபடைத்த மாணவர்களையும், அவர்களின் வெற்றிக்காக அயராது உழைத்த ஆசிரியர்களையும் வீனஸ் குழும பள்ளிகளின் தாளாளர் குமார், பள்ளி முதல்வர் ரூபியாள்ராணி, கல்வி ஒருங்கிணைப்பாளர் மகேஷ்சுந்தர் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Tags : school ,Venus ,pass ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி