விபத்தில் மூதாட்டி பலி

நெய்வேலி, மே 1: நெய்வேலி அடுத்த ஊமங்கலம் ரோமாபுரி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் தேவராஜ் (52). இவரது தாயார் பாக்கியம் (80). நேற்று அதிகாலை இவர் விருத்தாசலம் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோதி படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டதும் அவரது மகன் ஓடிவந்து பாக்கியத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பாக்கியம் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தேவராஜ் அளித்த புகாரின்பேரில் ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>