×

முத்துப்பேட்டையில் கார் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது3

முத்துப்பேட்டை, மே 1: முத்துப்பேட்டை அடுத்த பேட்டை கிராமத்தில் உள்ள வாழைக்கொல்லை மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி படையாச்சி தெருவை சேர்ந்த ஆதியப்பன் மகன் ஜெயராமன்(35) என்பவர் குலதெய்வம் வழிப்பாட்டிற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டை சாலை கொய்யா முக்கம் அருகில் எஸ்பிகேஎம் தெருவை சேர்ந்த முகமது நபீஸ் என்பவரின் நகை கடை எதிரே ஜெயராமனின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது.
இதனால் ஆத்திரமடைந்த முகமது நபீஸ் காரை ஓட்டி வந்த ஜெயராமனிடம் தகராறு செய்து கார் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஜெயராமன் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன் வழக்கு பதிந்து முகமது நபீசை கைது செய்து திருத்துறைப்பூண்டி சிறையில் அடைத்தார்.

Tags : car glass breaker ,
× RELATED ஆம்பூர், குடியாத்தத்தில் பரபரப்பு ...