×

வாள்சண்டை போட்டியில் பதக்கம் குவிக்கும் நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவர்கள்

நாமக்கல், மே 1: நாமக்கல் விளையாட்டு விடுதி மூலம் வாள்சண்டை பயிற்சி பெற்ற மாணவ,  மாணவிகள், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ளனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில்,நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி படித்து வரும் 40 மாணவ,மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 14 மாணவிகள்,16 மாணவர்கள்,வாள்சண்டை பயிற்சி பெற்று வருகின்றனர்.இவர்கள் மாநில,தேசிய மற்றும் சர்வதேச வாள்சண்டை போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில்,20 வயதுக்குட்பட்டோருக்கான வாள்சண்டை போட்டியில்,நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவி ஜெயகீர்த்தனா 5ம் இடமும், மாணவி நிலா வெண்கல பதக்கமும் வென்றனர். கடந்த ஆண்டு நடந்த ஆசிய வாள்சண்டை போட்டியில் மாணவி புனிதா 18ம் இடம் பெற்றார்.தாய்லாந்து ஓப்பன் போட்டியில் பங்கேற்ற மாணவன் அரவிந்தவேலன் 15ம் இடமும்,சபரி 22ம் இடமும், கவின் 26ம் இடமும்,மாணவி கீர்த்தனா 26வது இடமும் பெற்றுள்ளனர்.

மேலும், பஞ்சாப் மாநிலம் அமிர்தரசஸில், கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை,இந்திய பள்ளி குழுமம் சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான வாள்சண்டை போட்டி நடந்தது.இதில்,நாமக்கல் விளையாட்டு விடுதி மூலம் பயிற்சி பெற்ற மாணவன் பாண்டிதேவன் தங்கமும்,மாணவி மனோகரி, திரிசல்லா ஆகியோர் வெள்ளியும்,தேவதர்ஷினி வெள்ளி மற்றும் வெண்கலமும்,மாணவன் விஜய் வெண்கல பதக்கமும் பெற்றனர். உத்ரகாண்ட் மாநிலத்தில், கடந்த ஆண்டு நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் வாள்சண்டை போட்டியில்,மாணவர்கள் சிவசுப்ரமணியம், அரவிந்த்வேலன் ஆகியோர்,இந்திய ராணுவத்தில் பணிபுரியும் வாள்சண்டை வீரர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். ஜோர்டானில் உலக வாள்சண்டை போட்டி, கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில்,இந்தியாவின் சார்பில் 12 மாணவர்களும், 12 மாணவிகளும் பங்கேற்றனர். இதில் தமிழகத்தின் சார்பில்,நாமக்கல் விடுதி மாணவி மனோகரி பங்கேற்று 15ம் இடம் பெற்றார். இதுகுறித்து வாள்சண்டை பயிற்சியாளர் பிரபுகுமார் கூறுகையில், ‘நாமக்கல் விளையாட்டு விடுதி மூலம் வாள்சண்டை பயிற்சி பெற்ற 70 மாணவ, மாணவிகள் தேசிய மற்றும் சர்வதேச வாள்சண்டை போட்டிகளில் பங்கேற்று தங்கம்,வெள்ளி மற்றும் வெண்கலம் என ஆண்டுதோறும் 100 பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதனால் வாள்சண்டை போட்டியில் இந்திய அளவில் தமிழ்நாடு 5ம் இடத்தில் உள்ளது,’என்றார்.


Tags : Namaskar ,sports hostel students ,match ,Wanders ,
× RELATED இன்று இரவு 2 போட்டி; தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து இங்கி.-ஆஸ்திரேலியா மோதல்