×

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் அரசு மகளிர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

நாமக்கல், மே 1: நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. 39 ஆண்டுகளில் முதன் முறையாக இப்பள்ளி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளியில் தேர்வு எழுதிய 175 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளி மாணவி அஜிஜாரஹிமா 476 மதிப்பெண்ணும், சூர்யபிரபா 456, பிரித்தா 438 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94 சதவீத தேர்ச்சி பெற்ற இப்பள்ளி நடப்பாண்டு முதன் முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 1980ம் ஆண்டு முதல் மாணவிகள் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதி வருகின்றனர். கடந்த 39 ஆண்டுகளில் நடப்பாண்டு முதன் முறையாக 100 சதவீத தேர்ச்சியை பள்ளி பெற்றுள்ளது.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை பார்வதி கூறுகையில், வார இறுதி நாட்களில் கூட ஆசிரியைகள் மாணவிகளை வரவழைத்து பாடம் நடத்தினார்கள். 100 சதவீத தேர்ச்சி பெறவேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்து பணியாற்றினோம். அதற்கு பலன் கிடைத்துள்ளது. வரும் கல்வியாண்டிலும் இதே நிலை தொடரும் என்றார். 100 சதவீத தேர்ச்சி பெற பாடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளுக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Tags : SSLC Commonwealth Government Girls School ,
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி