×

கும்பகோணத்தில் ஹோம் லிங்க்ஸ் பொருட்காட்சி

கும்பகோணம், மே 1: கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அல் அமீன் பள்ளி மைதானத்தில் சென்னையை சேர்ந்த தமிழ்நாடு என்டர்டெயின்மெண்ட் கண்காட்சி நிறுவனம் நடத்தும் ஹோம் லிங்க்ஸ் பொருட்காட்சி நடந்து வருகிறது. பொருட்காட்சி குறித்து நிர்வாகத்தினர் கூறுகையில், பொருட்காட்சியில் பூங்காவை போன்ற கண்கவரும் அழகிய பூந்தோட்டங்களும், பறவைகள் மற்றும் பஞ்சவர்ண கிளிகளின் குரல்கள் ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, பொருட்காட்சியில் ஆஸ்திரேலிய பறவைகள், பனிகரடிகள், தென் ஆப்பிரிக்க யானைகள் ஆகிய விலங்கினங்களை போல அழகிய வண்ண செயற்கை முறையில் தத்ரூபமாக உள்ளதுபோல் பூங்கா, சிறுவர் முதல் பெரியவர் வரை கோடை மாலைவேளையில் குடும்பத்துடன் கண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன்  அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடையே புகையிலை மற்றும் மதுவால் ஏற்படக்கூடிய தீமைகளை விளக்கும் வகையில் அழகிய வண்ண ஓவியங்கள் தத்ரூபமாக தீட்டப்பட்டு  அரங்குகள் உள்ளன. வீட்டு உபயோகத்துக்கு தேவையான பொருட்களும், பெண்கள் அணிகலன்கள், காலணிள் பலவிதமான பிளாஸ்டிக் பொருட்கள், சிறுவர் முதல் பெரியவர் வரை அணிந்து கொள்வதற்குரிய திருப்பூர் பனியன்கள் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றனர்.

Tags : Home Links Exhibition ,Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...