×

10ம் வகுப்பு தேர்வில் சாதனை தேவர்குளம் சங்கரி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு 10ம் வகுப்பு தேர்வில் சாதனை தேவர்குளம் சங்கரி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

நெல்லை, மே 1: பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த தேவர்குளம் சங்கரி பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.தேவர்குளம் சங்கரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மேலஇலந்தைகுளத்தை சேர்ந்த மாணவி சரண்யா 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். தடியாபுரத்தை சேர்ந்த மாணவி அன்னசெல்வி 482 மதிப்பெண்களும், மூவிருந்தாளியை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா 479 மதிப்பெண்களும் எடுத்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஏடி.ராஜன், கவுரவ செயலாளர் மங்கை ராஜீ, பள்ளி முதல்வர் ராபின்சன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags : Degree College Sankari School ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது