பிரைன் ஓ பிரைன் அகாடமி புதிய கிளை துவக்கம்

அம்பை, மே 1: அம்பையில், பிரைன் ஓ பிரைனின் கிட்ஸ் அகாடமியின் மாணவர்கள் திறன் மேம்பாடு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் புதிய கிளை துவக்க விழா நடந்தது. பயிற்சி மைய இயக்குநர் ஸ்பர்ஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஸ்பர்ஜன்ஏஞ்ஜல்பாலினா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பிரைன் ஓ பிரைன் சென்னை நிறுவன மார்க்கெட்டிங் மேலாளர் ஜெயபிரதாப், குழந்தைகள் தங்களின் அறிவு மற்றும் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளவும், ஆளுமை திறன், நினைவாற்றல், கற்கும் திறன், எண்ணங்களை  ஒருமுகப்படுத்துதல், தலைமை பண்புகளை வளர்த்து தன்னம்பிக்கையோடு திகழ்வதற்கான பயிற்சியின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் குழந்தைகளின் பெற்றோருக்கு எடுத்துரைத்தார்.

முகாமில் பிரைன் ஓ பிரைன் கடையநல்லூர் கிளையின் பயிற்சி மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று கணக்குகளுக்கு விடையளித்து நேரடி செயல் விளக்கம் செய்து அசத்தினர். இவர்களுக்கு விகாசா பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர் ஜேசுதாஸ் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். இதில் வேல்ஸ் வித்யாலயா பள்ளி இயக்குநர் ராஜராஜேஸ்வரி, பேராசிரியர்கள் சுந்தரராமன், இந்துபாலகிருஷ்ணன்,  காசிநாதர் கோயில் ராஜகோபுர கமிட்டி தலைவர் வாசுதேவராஜா, ரோட்டரி கோமதிநாயகம், வர்த்தக சங்க பொருளாளர் சுப்புராமன், அரிமா கிருஷ்ணன், வக்கீல் மார்ட்டின், ராஜையா, சார்லஸ், ராஜா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். ஏஞ்சல் பவுலீனியா நன்றி கூறினார்.

Related Stories:

>