×

குற்றாலம் கல்லூரியில் கலந்தாய்வு தேதி மாற்றம்

தென்காசி, மே 1:குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி செயலர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற சென்னை கல்லூரி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 26.4.19ன்படி குற்றாலம் பராசக்தி மகளிர்கல்லூரியின் அரசு உதவிபெறும் பிரிவிற்கு மே 13 மற்றும் 14ம் தேதி நடைபெறவிருந்த கலந்தாய்வு, ஜூன் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெறும். மே 17ம் தேதி நடைபெற இருந்த சுயநிதிபிரிவு கலந்தாய்வு, ஜூன் 7ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களை கல்லூரியின் www.sriparasakthicollege.com  என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Courtyard College ,Courtroom Date Change ,
× RELATED சிவகிரியில் பைக்கில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்