×

சித்திரை பிரமோற்சவ திருவிழா வைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் 4 கருடசேவைv

வைகுண்டம், மே 1: வைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயில் சித்திரை     பிரமோற்சவ திருவிழாவில் 5ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனமும் 4கருடசேவை நிகழ்ச்சியும் நடந்தது. நவதிருப்பதி கோயில்களில் 1வது ஸ்தலமாக மற்றும் சூரியன் ஸ்தலமாக விளங்ககூடிய வைகுண்டம் கள்ளபிரான் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா ஏப்.25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை 7.30 மணிக்கு தங்க தோளுக்கினியானில் வீதிபுறப்பாடும் காலை 11மணிக்கு தங்க மசகிரியில் திருமஞ்சனமும் தீர்த்த விநியோக கோஷ்டியும் நடைபெறுகிறது. மாலை 6மணிக்கு யானை, புஷ்பபல்லக்கு, குதிரை வாகனம், வெற்றிவேர் சப்பரம் ஆகியவாகனங்களில் சுவாமி கள்ளபிரான் வீதி புறப்பாடு நடக்கிறது.

5ம் திருவிழாவை முன்னிட்டு ஏப்.29ம்தேதி காலை 9.45 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான், காய்சின வேந்தப்பெருமாள், எம்இடர்கடிவான் ஆகியோரை சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30மணிக்கு கள்ளப்பிரான் வீதிப்புறப்பாடும் நடந்தது. மாலை 5.30 மணிக்கு சுவாமிகள் கள்ளபிரான், எம்மிடர்கடிவான், காசினிவேந்தன், பொலிந்துநின்றபிரான், நம்மாழ்வார் ஆகியோருக்கு திருமஞ்சனம், தீர்த்த விநியோகக் கோஷ்டியும் நடந்தது.இரவில் கள்ளபிரான், எம்மிடர்கடிவான், காசினிவேந்தன், பொலிந்துநின்றபிரான் ஆகியோர் கருடவாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்சவாகனத்திலும் கருடசேவை ரதவிதிகளில் வீதி உலா நடந்தது.              மே 3ம் தேதி 9ம்திருவிழாவை முன்னிட்டு காலை 5.45மணிக்கு மேஷ லக்கனத்தில் சுவாமி கள்ளபிரான் திருத்தேரில் எழுந்தருள்கிறார் 9மணிக்கு பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டம் நடகிறது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி இசக்கியப்பன், தக்கார் விஸ்வநாத், ஸ்தலத்தார்கள் சீனிவாசன் ராஜப்பா வெங்கடாச்சாரி, நிவாசன், சாரதிராமன், கிருஷ்ணன் மற்றும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


Tags : Chitra Brahmotsavam ,festival ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...