×

ஜோலார்பேட்டை வழியாக சென்னை சென்ற6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2 மணிநேரம் தாமதம்

>ஜோலார்பேட்டை, மே1: ஜோலார்பேட்டை வழியாக சென்னை சென்ற 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2 மணிநேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதிபட்டனர்.சேலம் மாவட்டம், பொம்மிடி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது பொம்மிடி ரயில் நிலையம் அருகே தண்டவாளம் ஓரம் இருந்த மரம் முறிந்து ரயில்வே உயரழுத்த மின்கம்பி மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த சேலம், ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை அகற்றி கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் ஜோலார்பேட்ைட, காட்பாடி வழியாக செல்லும் சென்னை- பாலக்காடு பழனி எக்ஸ்பிரஸ், சென்னை- கோவை சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை- திருவனந்தபுரம், சென்னை- கேரளா ஆலப்புழா, ஜம்முதாவி- கன்னியாகுமரி வாராந்திர ரயில், எர்ணாகுளம் ஆகிய 6 எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. பின்னர் 2 மணிநேரம் தாமதமாக ரயில்கள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

Tags : Chennai ,Jolarpettai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...