×

அரவக்குறிச்சி தொகுதியில் அரசு கல்லூரிகள் இன்றி மேற்படிப்புக்கு மாணவர்கள் வெளியூர் செல்லும் அவலம்

கரூர்,  மே. 1: அரசு கல்லூரிகள் இல்லாததால் மேற்படிப்புக்கு அரவக்குறிச்சி தொகுதி மாணவர்கள் வெளியூர்செல்லும் அவலம்  நிலை உள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 5 பேரூராட்சிகள் உள்ளன.க.பரமத்தி, அரவக்குறிச்சி, கரூர்ஊராட்சி ஒன்றியங்களில் 54கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இத்தொகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும்தொழிற்பயிற்சி நிலையங்கள் இல்லை. கல்லூரி மற்றும்உயர் கல்வி, தொழிற்கல்வி படிப்பதற்காக திண்டுக்கல், திருச்சி, மாவட்டங்கள், கரூர், குளித்தலையில்உள்ள அரசு கல்லூரிகளுக்கும் சென்றுபடித்து வருகின்றனர். அரசு கல்லூரி மற்றும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில்தொழிற்பயிற்சி நிலையங்களை அமைக்கவேண்டும் என்பது பொதுமக்களின்நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது.

கடந்த 3ஆண்டுகளாக எம்எல்ஏ இல்லாத தொகுதியாக இருக்கிறது.  அரசு கல்விநிலையங்கள் இல்லாததால் அதிகம் செலவு செய்து தனியார் கல்லூரிகளில் சேரவேண்டியநிலை உள்ளது.   முதல்வருக்கு எதிராக மனுகொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் அரவக்குறிச்சி எம்எல்ஏவும் ஒருவர். அதன்பின்னர் அரவக்குறிச்சி தொகுதிக்கான தேர்தலையும் நடத்தவில்லை. வளர்ச்சிப்பணிகளையும் மேற்கொள்ளவில்லை. கோர்ட்டுக்குப்போய் உத்தரவிட்டதால்தான் இந்த தேர்தலும் நடக்கிறது என்பது குறிப்பிட தக்கது.

Tags : constituency ,Aavakurichi ,government colleges ,outskirts ,
× RELATED நெல்லை மக்களவை தொகுதி; ஸ்ட்ராங்க் ரூம் சாவி தொலைந்ததால் பூட்டு உடைப்பு!