கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் பராமரிப்பின்றி கருகும் தேக்குமரங்கள்3

கரூர், மே. 1: கரூர் வாங்கப்பாளையம் கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள தேக்கு மரங்களை பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட வாங்கப்பாளையத்தில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர்   அலுவலக வளாகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் ஏராளமான தேக்கு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக கரூரை மிரட்டி வரும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, அனைத்து தேக்கு மரங்களும் கருகிய நிலையில் உள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த மரங்களில் ஒன்றாக கருதப்பட்டு வரும் இந்த தேக்கு மரங்கள் போதிய அளவு பராமரிக்கப்படவில்லை எனவும்  கூறப்படுகிறது. எனவே, பராமரிப்பின்றி வளர்க்கப்பட்டு வரும் இந்த தேக்கு மரங்களை வளர்ப்பதில் அதிக கவனம் எடுத்து வளர்க்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Assistant Directorate ,Quarry Rural Industries ,office premises ,
× RELATED கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்...