×

காட்டு வாய்க்கால் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு..

கரூர், மே. 1: வாங்கல் சாலையில் இருந்து மண்மங்கலம் செல்லும் சாலையோரம் உள்ள காட்டு வாய்க்கால் பகுதியில் ஆக்ரமித்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் வாங்கல் செல்லும் சாலையில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் உட்பிரிவு சாலைகள் பிரிகின்றன. அதில், வாங்கல் செல்லும் சாலையில் இருந்து மண்மங்கலம் செல்லும் சாலை பிரிகிறது.
இந்த சாலையோரம், மழைக்காலங்களில் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில், காட்டு வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாய்க்கால், வாங்கல் சாலையில் குறுக்கிடுவதால், இடையே வாய்க்கால் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் வடிகால் பாலம் அருகே கொட்டி வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தேக்கம் காரணமாக, மழைக்காலங்களில், வாய்க்கால் சீராக செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு, வாய்க்காலும் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த பகுதியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக இந்த இடத்தில் இருந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : drain area ,
× RELATED வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்