கொலை, அடிதடி வழக்குகளில் தலைமறைவான 2 பேர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினர்

சென்னை: அடிதடி வழக்குகளில் சிக்கி வெளி நாட்டிற்கு தப்பிச்சென்ற 2 குற்றவாளிகள் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டனர். தஞ்சாவூர் அம்மாபேட்டையை சேர்ந்த கொலை வழக்கு குற்றவாளி மணிகண்டன் (32), கடந்த 11 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். தஞ்சாவூர் பாபநாசம் பகுதியை சேர்ந்த சேக் முகமது (32). இவர், மீது அடிதடி, வீடு புகுந்து தாக்குதல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில் இருவரும், நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, தேடப்படும் குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் ைகது செய்து தனியறையில் அடைத்தனர். தகவல் அறிந்து தஞ்சாவூர், பாபநாசம் போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

Tags : persons ,murder ,Chennai airport ,
× RELATED விபத்தில் வாலிபர் பலி லாரி டிரைவர் உள்பட 3 பேர் கைது