×

கோடைமழைக்கு பூத்துகுலுங்கும் காபி செடிகள்

பந்தலூர், ஏப்.30: பந்தலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கோடை மழைக்கு பூத்துக்குலுங்கும் காபி செடிகளால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பந்தலூர் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் விவசாயிகள் காபி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பந்தலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் கோடைமழை பெய்தது. இதனால் காபி செடிகள் பூத்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘தொடர் மழை நீடித்தால் பூக்கள் அழுகி மகசூல் பாதிக்கப்படும் நிலை உருவாகும் சில நாட்கள் மழை பெய்யாமல் இருந்தால் பாதிப்பு ஏற்படாது பாதுகாக்கலாம்’’ என்றனர்.  பசுந்தேயிலைக்கு குறைந்த விலை கிடைக்கும் நிலையில் தற்போது காபிக்கு நல்ல விலை இருப்பதால் விவசாயிகள் காபி விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

Tags : Coffee plants ,
× RELATED கொல்லிமலையில் மிளகு, காபி செடிகளை கபளீகரம் செய்யும் வெட்டுக்கிளி கூட்டம்