10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மாவட்டத்தில் 96.27 சதவீதம் தேர்ச்சி

ஊட்டி, ஏப். 30: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் இத்தேர்வினை 3890 மாணவர்களும், 4067 மாணவியர்கள் என மொத்தம் 7957 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்ேதர்வு முடிவுகள் நேற்று வௌியானது. இதில் 3662 மாணவர்கள், 3998 மாணவியர்கள் என மொத்தம் 7660 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 96.27 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.07 சதவீதம் அதிகம் ஆகும். இதில், மாணவர்கள் 94.14 சதவீதமும், 98.30 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள 87 அரசு பள்ளிகளில் 2755 பேர் தேர்வு எழுதினர். இதில், 2538 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் பயின்ற 92.12 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 51 அரசு பள்ளிகளும், 20 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 40 தனியார் பள்ளிகளும் என

மொத்தம் 111 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

Related Stories:

>