×

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தொடர் பைக் திருட்டு

திருவள்ளூர், ஏப். 30: திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவைக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் அவ்வப்போது திருட்டு போகிறது. பைக் திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும், 3,000க்கும் அதிகமான புறநோயாளிகள் வருகின்றனர். ஆயிரக்கணக்கான உள்நோயாளிகளும் உண்டு. நோயாளிகள் தவிர அவர்களின் உறவினர்கள், பார்வையாளர்கள் என தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தும், பார்வையாளர்கள், மருத்துவ பணியாளர்களின் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போகின்றன.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடப்பட்டுள்ளன. இதை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதேபோல், திருவள்ளூர் தாலுகா அலுவலகம், ஸ்டேட் வங்கி உட்பட பல இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருடு போகிறது. எனவே, நகரில் பைக்குகளை திருடும் கும்பலை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்
துள்ளது.

Tags : state hospital ,Tiruvallur ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...