×

செம்மரகட்டைகள் 100 கிலோ பறிமுதல்

புழல், ஏப். 30: புத்தாகரத்தில் மரக்கடையில் பதுக்கி வைத்த 100 கிலோ செம்மரகட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். புழல் அடுத்த புத்தாகரம் அய்யன் வள்ளுவர் சாலை அருகில் உள்ள ஒரு மரக்கடையில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று மாலை அங்கு சென்ற வனத்துறையினர் மேற்கண்ட கடையில் சோதனை செய்தனர். அப்போது, நான்கு மூட்டைகளில் சிறிய அளவு கொண்ட செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் எடை 100 கிலோ. இவற்றின் மதிப்பு ₹3 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் ஜெகன் என்பவரை பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து...