×

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம் : இரட்டையர் கராத்தே வீரர்கள் பேட்டி

அண்ணாநகர், ஏப். 30: ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு, கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே லட்சியம் என 7 வயதான இரட்டையர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் முதன்முறையாக தென்னிந்திய கராத்தே போட்டிகளில் பிளாக் பெல்ட் பெற்று காரைக்காலை சேர்ந்த 7 வயது இரட்டையர்களான விசாகன், ஹரிணி ஆகியோர் சாதனை புரிந்துள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் கடந்த மாதம் கேரளாவில் நடைபெற்ற தென்னிந்திய பாக்சிங் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர். இருவரையும் புதுவை முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் காரைக்காலில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் தென்னிந்திய கராத்தே போட்டி குறித்து நேற்று காலை அண்ணாநகர் லோட்டஸ் பூங்காவில் நிருபர்களை சந்தித்து பேசியதாவது: இரட்டையர்களான நாங்கள் கராத்தே போட்டிக்கு வெளியூர் போகிறபோது வயது மற்றும் எடைக்கு ஏற்ற மாதிரிதான் போட்டியாளர்களும் இருப்பாங்க. எங்களைவிட பெரியவங்க கலந்துக்கிட்டாலும் அசராம போட்டியிடுவோம். எங்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெறவேண்டும் என்பதுதான் லட்சியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : twins ,Olympics ,
× RELATED ஏமாற்றுவதில் இது புது விதம்டா சாமி…...