×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கல்வி மாவட்டத்தில் 95.61 சதவீதம் தேர்ச்சி

பொள்ளாச்சி, ஏப். 30:   பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அரசு பள்ளி, நகராட்சி பள்ளி, சுயநிதி பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி என மொத்தம் 99 பள்ளிகளில் படித்த 5768 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். கல்வி மாவட்டத்திற்குட்பட்ட வால்பாறை, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் உள்ள மொத்தம் 39 மையங்களில் பொது தேர்வு நடந்தது.  இதனிடையே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  நேற்று காலை வெளியானது. கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாகம் முன்பு, காலை சுமார் 9.30மணியளவில் மாணவர்கள் பெயர் மற்றும் மதிப்பெண் பட்டியலுடன் தகவல் அறிக்கை இடத்தில் ஒட்டப்பட்டது. அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்களை மாணவர்கள் ஆர்வமுடன் பார்க்க சென்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.  

 பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 5767 பேரில். மாணவர்கள் 2476 பேரும், மாணவிகள் 3291 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி மொத்த தேர்ச்சி விகிதம் 95.61 சதவீதமாகும். கல்வி மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தேர்ச்சி விகிதம் 95.34 வீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம், சற்று உயர்ந்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பெரியபோது, ஆத்துப்பொள்ளாச்சி, பெத்தநாயக்கனூர், ரொட்டிக்கடை, எஸ்.மலையாண்டிபட்டிணம், அட்டக்கட்டி என 6 அரசு பள்ளிகளும். மகாலிங்கபுரம் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வால்பாறை தூய இருதய பெண்கள் மேல்நிலை பள்ளி என இரண்டு அரசு உதவிபெறும் பள்ளியும்.  38 தனியார்  பள்ளிகளும் என மொத்தம் 46 பள்ளிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Education District ,
× RELATED அரியலூர் அண்ணா சிலை பகுதியில்...