×

கொடுமுடி அருகே மாணவன் கடத்தல்

கொடுமுடி,ஏப்.30:  கொடுமுடி அருகே பள்ளி மாணவர் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் உலவும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரோடு மாவட்டம்  சின்னாக்கண்டனூரை சேர்ந்தவர் மாவடி(73) விவசாயி. இவரது மகன் நிவாஸ்(14). இவர் ஊஞ்சலூர் அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால்  நேற்று முன்தினம் 8 மணிக்கு அவர்களது விவசாய நிலத்துக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றார். ஆனால் நிவாஸ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் நிவாஸை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இது குறித்து கொடுமுடி போலீசாரிடம்  நேற்று புகார் அளித்தனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில்  நிவாஸ் கடத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து தகவல் அறிந்தால் அதனை தெரிவிக்கும்படி வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது கடத்தப்பட்ட நிவாசிடம்  பள்ளிக்கு செல்லும் அரசு பேருந்தில் வரும் மர்ம நபர் ஒருவர் நெருங்கி பழகியுள்ளார்.  நிவாஸ் கடத்தப்பட்ட நாளிலிருந்து அந்த மர்மநபரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது அவரும் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து கொடுமுடி போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அந்த மர்மநபர் சேலம் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் சங்கரன்கோயில் போலீஸ் எல்லைக்குள் நடந்த ஒரு சம்பவத்தில் குற்றவாளி என்றும் அவர் தற்போது தலைமறைவாக உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.

Tags : Kidnapping student ,Kodumudi ,
× RELATED கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்...