×

முக்கடல் சங்கமம் கடற்கரையில் மண் அரிப்பால் பலமிழந்த தடுப்பு சுவர்

கன்னியாகுமரி, ஏப்.30: கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து கடலை ரசிக்கும் தடுப்பு சுவர் மண் அரிப்பால் பலமிழந்து இடியும் நிலையில் உள்ளது. உயிரிழப்பு ஏற்படும் முன் இதனை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு கோடை விடுமுறையையொட்டி தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். முக்கடல் சங்கமத்தில் குளிக்கும் இவர்கள் கடற்கரையில் அமர்ந்து இயற்கையை ரசிக்கின்றனர்.முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயம், மறைவை பார்க்க முடியும் என்பதால் ஏராளமானோர் காலை மாலை வேளையில் இங்கு அமர்கின்றனர். ஆனால் முக்கடல் சங்கமம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு வசதியாக இருக் வசதிகள் செய்யப்படவில்லை.

இதனால் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள அலை தடுப்பு சுவரில் அமர்ந்து இயற்கையை ரசிக்கின்றனர். தினமும் காலை மாலை வேளையில் குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் அமர்ந்து இருப்பது வழக்கம். அரசால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்
படாத நிலையில் இந்த சுவர் தான் சுற்றுலா பயணிகள் அமர்ந்து கடலை ரசிக்க முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.இந்நிலையில் கடலின் சீற்றம் காரணமாக தடுப்பு சுவரில் அலைமோதி மண் அரிப்பு ஏற்படுகிறது. தடுப்பு சுவருக்கு அடிப்பகுதியில் மண் அரிக்கப்படுவதால் தடுப்பு சுவரின் உள் பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த தடுப்பு சுவரின் அருகில் சுமார் 10 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பு சுவர் எந்த ேநரத்திலும் இடிந்து விழும் அபாயம் உருவாகி உள்ளது.முக்கடல் சங்கமத்தை பராமரித்து வரும் இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இந்த பேராபத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது. தடுப்பு சுவர் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் அதிகாரிகள் தடுப்பு சுவரை சீர் செய்ய வேண்டும்.

இதுபோல் பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இருக்கைகள், குடிநீர், வெயிலை சமாளிக்க ஓய்வறை என எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. இதுபோல் சன்னதி தெருவில் நீதிமன்ற உத்தரவுபடி ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ஆக்ரமிக்கப்பட்டு அங்கு கடைகள் கட்டப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளுக்கு இடையூராக இருந்து வருகிறது.எனவே கோடை விடுமுறையில் வரும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக முக்கடல் சங்கமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அதோடு, உயிர்பலி வாங்க காத்திருக்கும் தடுப்பு சுவரை சீரமைத்து பலப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : beach ,soil erosion ,
× RELATED சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே...