×

கடலில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரி, ஏப். 30:  தமிழகம், புதுச்சேரியில் பானி புயல் தாக்கம் இருக்காது என அறிவிப்பு வெளியிடப்பட்டதால் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் கடலில் மகிழ்ச்சியாக குளித்தனர்.வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மேலும் இரு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இதனிடையே புயலையொட்டி கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் புதுவையில் கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை கடல் சற்று கொந்தளிப்பாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்காத வண்ணம் போலீசார் காவலுக்கு இருந்தனர். இருந்தபோதும் ஒருசிலர் கடலில் இறங்கி குளித்தனர். அவர்களை போலீசாரும், பாதுகாப்பு குழுவினரும் எச்சரித்து வெளியேற்றினர்.

இந்நிலையில் புயலின் திசை மாறியுள்ளதாகவும், இதனால் தமிழகம், புதுவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் வானிலை மையம் அறிவித்தது. இதையடுத்து கடலில் குளிக்க இருந்த தடை நேற்று மதியம் தளர்த்தப்பட்டது. இதனால் மதியத்திற்கு மேல் சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் அதிகளவில் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்திருந்தனர். அவ்வாறு வந்தவர்கள் தலைமை செயலகம் எதிரே செயற்கை மணற்பரப்பில் இறங்கி கடலில் ஆனந்தமாக குளித்தனர். இதனால் அப்பகுதி திருவிழா திடல் போல காட்சியளித்தது.

Tags : sea ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...