×

புல்லுக்காட்டுவலசை முப்புடாதியம்மன் கோயிலில் இன்று சித்திரை ேதரோட்டம்

நெல்லை, ஏப். 30:  புல்லுக்காட்டுவலசை முப்புடாதியம்மன் கோயிலில் இன்று (30ம்தேதி) சித்திரை ேதரோட்டம் நடக்கிறது. புல்லுக்காட்டுவலசை வடக்கு தெருவில் நாடார்களுக்கு பாத்தியப்பட்ட முப்புடாதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை புரட்டாசி 2வது செவ்வாய், சித்திரை 3வது செவ்வாய் அன்றும் திருவிழா நடைபெறும். புரட்டாசி திருவிழாவில் அம்மன் சப்பர ஊர்வலம், சித்திரை திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும்.இந்தஆண்டு சித்திரை திருவிழா கடந்த 23ம்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் மதிய பூஜை, அன்னதானம் நடக்கிறது. இரவு 8மணிக்கு முளைப்பாரி எடுக்கும் பெண்களின் பூஜை நடக்கிறது. தொடர்ந்து இரவு அன்னதானம் நடக்கிறது. நேற்று இரவு 8மணிக்கு கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் நடந்தது. இன்று ( 30ம்தேதி) மதியம் உச்சிக்கால பூஜையை தொடர்ந்து கூழ் ஊற்றும் வைபவம் நடக்கிறது. இரவு 8மணிக்கு கரகாட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 12மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேேராட்டம் நடக்கிறது. இரவு முழுவதும் ஊர் சுற்றி வரும் தேர் காலை 8மணிக்கு கோயில் நிலையை வந்தடையும். தேரோட்டத்தில் ஊர் பொதுமக்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். தேர் நிலையை அடைந்ததும்பெண்களின் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. ஊரணியில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை வடக்கு தெரு நாட்டாமைகள், விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags : Mullupadiyamman Temple ,
× RELATED விஷம் குடித்த தொழிலாளி சாவு