செயிண்ட் அசிசி பள்ளி 100 சதவீத தேர்ச்சி

பாவூர்சத்திரம், ஏப்.30:  பாவூர்சத்தரிம் செயிண்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.பாவூர்சத்திரம், செயிண்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 60 மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதினர். இதில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும்  தேர்ச்சி பெற்றனர். இது நூறு சதவீத தேர்ச்சியாகும். மாணவி கிளாடிஸ் 489 மதிப்பெண், மாணவி தர்ஷினி 484 மதிப்பெண், மாணவி  தீப்தி மற்றும் ஜெனிஷா 474 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.  தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவியரையும் பள்ளி தாளாளர் அந்தோணி சேவியர், நிர்வாகி நிர்மலா, முதல்வர் முத்துலெட்சுமி, மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags : St. ACC School ,
× RELATED பஸ் பாஸ் இருந்தும் பள்ளி மாணவனிடம் பஸ்...