×

நெரூர் செல்லும் சாலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகும் அவலம்

கரூர், ஏப். 30: குழாய் கசிவினால் குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்கு காவிரியாற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.  இந்த பகிர்மான குழாய்களில் ஆங்காங்கே குடிநீர் கசிந்து வருகிறது. நெரூர் செல்லும் சாலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டும் சரி செய்யாததால் குடிநீர் வீணாகி வருகிறது. காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக 7 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் குடிநீர் கிணறுகளுக்கு நீர் ஆதாரம் கிடைத்துள்ளது. எனினும் இதுபோன்ற குழாய் விரிசல் காரணமாக ஆங்காங்கே குடிநீர் வீணாகி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தற்போது தொடர்ந்து தனி அதிகாரி பதவிக்காலம்  நீட்டிக்கப்பபட்டு வருகிறது. எனினும் அதிகாரிகள் இது குறித்து கண்டுகொள்வதில்லை எனவே உடனடி நடவடிக்கை எடுத்து குழாய்களை மாற்றி அமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : road ,Nerur ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி