×

சாத்தான்குளம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தை கணக்கெடுப்பு பணி

சாத்தான்குளம், ஏப். 30: சாத்தான்குளம் ஒன்றியத்தில் பள்ளிசெல்லா  மற்றும் இடைநின்றகுழந்தைகள்  மாற்றுத்திறனாளிகள் பற்றிய  கணக்கெடுப்புப்பணி  பெரியதாழையில் நடந்தது.அனைவருக்கும்கல்வி இயக்கம் சார்பில் 6 முதல் 18வயதுள்ள  அனைத்து  குழந்தைகளும் இலவச  கட்டாயக் கல்விபெற  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாத்தான்குளம் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளில் 195 குடியிருப்புகளிலும் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு பணி  நடந்து வருகிறது. சாத்தான்குளம் அருகே   பெரியதாழையில்   சாத்தான்குளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) மகேஸ்வரி தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் கணக்கெடுப்பில்  ஈடுபட்டனர். கணக்கெடுப்பில் இதுவரை 6 முதல் 14 வயது  வரை   35 மாணவர்கள் பள்ளி  செல்லாமல் இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது.  இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களை  சந்தித்து ஜுன் மாதம் இம்மாணவர்களை   மீண்டும் பள்ளிக்குஅனுப்புமாறும், கல்வியின் அவசியம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.



Tags : school ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி